போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் : 12 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி..!!

2 February 2021, 4:35 pm
polio-drive - updatenews360
Quick Share

மகாராஷ்டிராவில் போலியோ சொட்டு மருந்திற்கு பதிலாக, சானிடைசரை கொடுத்ததால், உடல்நலம் பாதிக்கப்பட்ட 12 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று முன்தினத்தில் இருந்து 5 வயது முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் பணி தொடங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக போலியோ இல்லாத நாடாக இருந்து வரும் இந்தியா, மருத்துவ பாதுகாப்பை நீட்டிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

இருப்பினும், ஆப்கன், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் போலியோ பாதிப்பு தென்பட்டது. இந்த அண்டை நாடுகளில் இருந்து போலியோ இந்தியாவிற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் நேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. அங்கு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்திற்கு பதிலாக, சானிடைசரை மருத்துவ பணியாளர்கள் வழங்கியது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, வயிறு கோளாறு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக சுகாதார பணியாளர், மருத்துவர் மற்றும் ஆஷா பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 32

0

0