பாராளுமன்ற வளாகத்தில் இருந்த மகாத்மா காந்தியின் சிலையை வேறு இடத்திற்கு மாற்றியது மத்திய அரசு..!

20 January 2021, 5:21 pm
gandhi_statue_updatenews360
Quick Share

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள தேசப்பிதா மகாத்மா காந்தி சிலை இன்று அகற்றப்பட்டு, பிரதான வாயிலுக்கு எதிரே கேட் எண் 3’க்கு அருகிலுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. 

வரும் 2022’இல் 75’ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், அதிக இடவசதிகளுடன் கூடிய நவீன பாராளுமன்றத்தை கட்டும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 

இதற்காக, டிசம்பர் 10 ஆம் தேதி சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் மற்றும் பூமி பூஜையை மேற்கொண்டார்.

இதற்காக தற்போது பாராளுமன்றத்தில் உள்ள சில கட்டுமானங்களை அகற்றவேண்டிய சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் அமர்ந்த நிலையில் இருக்கும் மகாத்மா காந்தியின் 16 அடி உயர வெண்கல சிலை இருக்கும் இடமும் புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகளுக்குத் தேவைப்படுகிறது. 

வழக்கமாக அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த இடத்தில் கூடி தான் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது மகாத்மா காந்தியின் சிலை அகற்றப்பட்டு, கேட் எண் 3’க்கு அருகிலுள்ள ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

Views: - 0

0

0