விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்: பழைய விலைக்கே உரங்களை வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவிப்பு..!!

11 April 2021, 10:23 am
uram rate - updatenews360
Quick Share

புதுடெல்லி: பயிர் சாகுபடிக்கான முக்கியக் கூட்டு உரங்கள் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா விளக்கமளித்துள்ளார்.

பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் முக்கிய கூட்டு உரங்களின் விலையை, உர உற்பத்தி நிறுவனங்கள் திடீரென 60 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தின. அதற்கான அறிவிப்பும் வெளியானது. அதன்படி, 50 கிலோ டி.ஏ.பி. உர மூட்டையின் விலை 1200 ரூபாயிலிருந்து 1900 ரூபாயாக உயர்ந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இதனிடையே எதிர்க்கட்சிகளும் அரசு மீது விமர்சனங்களை முன்வைத்தன. ஏற்கனவே டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் புதிய பிரச்சனையாக உர விலை உயர்வு உருவெடுத்தது. இதையடுத்து உடனடியாக தலையிட்ட மத்திய அரசு உரங்களின் விலை உயர்வை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வெளியிட்டுள்ள வீடியோவில், உரங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. பேச்சுவார்த்தையில் தற்போதைக்கு உரங்களின் விலை உயர்வை நிறுத்தி வைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பழைய விலைக்கே உரங்களை வாங்கி கொள்ளலாம் என்நு தெரிவித்துள்ளார்.

Views: - 37

2

0