மம்தா பானர்ஜியின் புதிய ஆடியோ லீக்கானது..! சுவேந்து அதிகாரியின் நெருங்கிய உதவியாளரை வளைக்க முயற்சி..!

Author: Sekar
27 March 2021, 5:31 pm
mamata_audio_clip_updatenews360
Quick Share

நந்திகிராமில் பாஜக தலைவர் பிரலாய் பால் இன்று திரிணாமுல் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தன்னை அழைத்ததாகவும், சுவேந்து அதிகாரியை தோற்கடித்து தான் வெல்ல உதவுமாறு கேட்டுக் கொண்டதாகவும் பரபரப்பான கூற்றை முன்வைத்தார்.

இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள வீடியோவில், இன்று காலை பிரலாய் பால், தனக்கும் நந்திகிராமில் உள்ள திரிணாமுல் கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்யுமாறு வற்புறுத்துவதற்காக மம்தா பானர்ஜி தனக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்ததாகக் கூறினார். தொலைபேசி உரையாடலின் ஒரு ஆடியோ கிளிப்பும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும், கூறப்படும் அழைப்பு பதிவில் உள்ள குரல் உறுதிசெய்யப்படவில்லை என்று திரிணாமுல் கட்சி தெரிவித்துள்ளது.

“நான் அவருக்காக வேலை செய்து திரிணாமுல் கட்சிக்குத் திரும்ப வேண்டும் என்று மம்தா பானர்ஜி விரும்பினார். ஆனால் நான் நீண்ட காலமாக சுவேந்து அதிகாரி மற்றும் அதிகாரி குடும்பத்துடன் தொடர்பு கொண்டிருந்தேன். நான் இப்போது பாரதிய ஜனதா கட்சிக்காக பணியாற்றி வருகிறேன்.” என பிரலாய் பால் கூறியுள்ளார்.

அவர் மேலும் வீடியோவில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் நந்திகிராம் மக்களை சித்திரவதை செய்யும் போது, அதிகாரி குடும்பமே எங்களுக்கு ஆதரவாக நின்றது. நான் அவர்களுக்கு எதிராக ஒருபோதும் சென்றதில்லை. நான் ஒருபோதும் அவ்வாறு செய்ய துணிய மாட்டேன்.” எனக் கூறினார்.

நந்திகிராமின் உள்ளூர்வாசிகளுக்கு திரிணாமுல் கட்சி ஒருபோதும் உரிமை வழங்கவில்லை என்றும், தான் தொடர்ந்து பாஜகவுக்கு சேவை செய்வேன் என்றும் மம்தா பானர்ஜியிடம் கூறியதாக பிரலாய் பால் கூறினார். நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி வெற்றி பெறுவதை உறுதி செய்வேன் என்று பிரலாய் பால் மேலும் சபதம் செய்தார்.

கூறப்படும் உரையாடலின் ஆடியோ கிளிப்பைப் பகிர்ந்த பாஜக தலைவர் அமித் மால்வியா, “மம்தா பானர்ஜி நந்திகிராமில் பாஜகவின் மாவட்ட துணைத் தலைவரான பிரலாய் பால் என்பவரை அழைத்து உதவி கோருகிறார்! திரிணாமுல் கட்சியின் அவமானப்படுத்தப்பட்டதாகவும், அவருடன் சேர்ந்து தங்கள் குடும்பம் பாஜகவுக்கு துரோகம் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். நிச்சயமாக நந்திகிராம் மற்றும் மேற்குவங்கத்தை திரிணாமுல் கட்சி இழக்கும்.” என்று ஒரு ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, புர்பா மதினிபூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். தேர்தலுக்கு முன்னதாக திரிணாமுல் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறிய சுவேந்து அதிகாரிக்கு எதிராக அவர் போட்டியிடுகிறார்.

Views: - 147

0

0