பெகாசஸ் விவகாரம்.. தனி ரூட்டெடுக்கும் மம்தா : கைகோர்க்குமா எதிர்கட்சிகள்..!!!

Author: Babu
26 July 2021, 6:30 pm
mamata - pegasus - updatenews360
Quick Share

பெகாசஸ் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜியின் அதிரடி நடவடிக்கையால் எதிர்கட்சியினர் குஷியாகியுள்ளனர்.

இஸ்ரேல் நாட்டு தயாரிப்பான பெகாசஸ் என்னும் சாஃப்ட்வேரை பயன்படுத்தி அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்களை ஒட்டு கேட்க இலக்கு வைக்கப்பட்டதாகவும், மேலும் ராகுல் காந்தி உள்ளிட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இதற்கு அனைத்திற்கும் மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதிகள் எம்.வி. லோகூர் மற்றும் ஜோதிர்மாய் பட்டச்சாரியா ஆகியோர் கொண்ட ஒரு குழுவை அமைத்து உள்ளார்.

Views: - 193

0

0