வாக்குச்சசாவடிகளை கைப்பற்ற மம்தா பானர்ஜி தொண்டர்களுக்கு உத்தவிட்டாரா..? பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார்..!

4 March 2021, 7:43 pm
mamata_Updatenews360
Quick Share

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாரதீய ஜனதா கட்சி இன்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களின் போது வாக்குச்சாவடியை கைப்பற்றுவதன் மூலம் தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

பாஜகவின் மேற்கு வங்க பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்கியா, சமீபத்தில் மம்தா பானர்ஜி விளையாட்டு ஆரம்பம் எனப் பொருள்படும் வகையில் கெலா ஹோப் எனக் கூறிய கருத்து தொடர்பாக மம்தா பானர்ஜி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

“சமீபத்தில் நடந்த ஒரு பேரணியில், மம்தா பானர்ஜி கெலா ஹோப் என்று கூறினார். இதன் பொருள் என்ன? தேர்தல்கள் நியாயமான முறையில் நடத்தப்படாது என்பது அவரது அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. வாக்காளர்கள் அச்சுறுத்தப்படுவார்கள். 
திரிணாமுல் கட்சியினர் வாக்குச்சாவடியை கைப்பற்றுவதை செயல்படுத்தும். இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அறிவித்துள்ளோம்.” என்று விஜயவர்கியா பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் மார்ச் 27 முதல் எட்டு கட்டங்களாக நடைபெறும். முடிவுகள் மே 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 6

0

0