தைரியம் இருந்தால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள்..! மோடி அரசுக்கு மம்தா பானர்ஜி சவால்..!

17 December 2020, 8:24 pm
Modi_Mamta_Banarjee_UpdateNews360
Quick Share

மம்தா பானர்ஜியின் கீழ் மேற்கு வங்க அரசாங்கத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் உச்சத்தை எட்டி வரும் நிலையில், தைரியம் இருந்தால் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கலைத்து விட்டு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திப் பார்க்க மோடி அரசுக்கு மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸின் கூர்மையான எதிர்வினை தற்போது மேற்குவங்கத்தில் பணிபுரியும் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு வருமாறு உத்தரவிட்ட உள்துறை அமைச்சகத்தின் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ராஜீப் மிஸ்ரா (ஏ.டி.ஜி, சவுத் பெங்கால்), பிரவீன் திரிபாதி (டி.ஐ.ஜி, பிரசிடென்சி ரேஞ்ச்) மற்றும் போலநாத் பாண்டே (எஸ்.பி.) ஆகியோர், டிசம்பர் 10’ம் தேதி டையமண்ட் துறைமுகத்திற்கு செல்லும் வழியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் கான்வாய் தாக்கப்பட்ட சில நாட்களுக்கு பின்னர் இந்த உத்தரவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மம்தா பானர்ஜி, தனது தொடர்ச்சியான ட்வீட்டுகளில், அதிகாரிகளை பிரதிநிதியாக அனுப்பக் கோரிய மத்திய அரசின் உத்தரவு அதிகாரத்தை அப்பட்டமாக தவறாக பயன்படுத்துவதாக உள்ளது என்று கூறினார்.

“இந்த நடவடிக்கை, குறிப்பாக தேர்தல்களுக்கு முன்னர் கூட்டாட்சி கட்டமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது. இது அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அவர் கூறினார்.

டி.எம்.சி தலைவரும் மாநில ஊரக வளர்ச்சி அமைச்சருமான சுப்ரதா முகர்ஜியும் மத்திய அரசின் முடிவை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“நாங்கள் அவர்களை மத்திய அரசு பணிக்கு அனுப்ப மாட்டோம். அதிகபட்சமாக, மத்திய அரசால் ஜனாதிபதி ஆட்சியை விதிக்க முடியும். நாங்கள் அதை வரவேற்கிறோம். அதைச் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இருந்தால், அதை செய்யுங்கள்.” என்று கொல்கத்தாவில் செய்தியாளர் கூட்டத்தில் சுப்ரதா முகர்ஜி கூறினார்.

Views: - 0

0

0