தோல்வியடைவதை ஒப்புக்கொண்ட மம்தா பானர்ஜி..? பாஜகவுக்கு எதிராக அணி சேர அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு..!

31 March 2021, 9:39 pm
Mamata_Banerjee_UpdateNews360
Quick Share

சோனியா காந்தி, சரத் பவார், மு.க.ஸ்டாலின், தேஜஷ்வி யாதவ், உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால், நவீன் பட்நாயக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில், திரிணாமுல் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீதான பாஜகவின் தாக்குதலுக்கு எதிரான பயனுள்ள போராட்டத்தை மேற்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ், என்.சி.பி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில், மம்தா பானர்ஜி, “ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீதான பாஜகவின் தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றுபட்ட மற்றும் பயனுள்ள போராட்டத்திற்கான நேரம் வந்துவிட்டது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் சுவேந்து அதிகாரிக்கு எதிராக நந்திகிராமில் இருந்து சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடும் நிலையில், மேற்குவங்கத்தில் அவரது கட்சி மட்டுமல்லாது, நந்திகிராமில் அவரே தோல்வியைத் தழுவ வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், தேர்தலுக்கு பிறகு தோல்வியைத் தழுவும் பட்சத்தில், பாஜகவுக்கு எதிராக ஒரு வலுவான அணியைக் கட்டமைக்க மம்தா பானர்ஜி விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதனால் ஒற்றைக் கட்சி ஆட்சியை பாஜக செயல்படுத்த முனைகிறது என குற்றம் சாட்டி, பாஜகவிற்கு எதிரான கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கிடையே, அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் ஆதரவு கோரி மம்தா கடிதம் எழுதியது, அவரது தோல்வி பயத்தைக் காட்டுவதாக உள்ளது என பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

Views: - 13

1

0