அரிய மறதி நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆசை…சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் மம்முட்டி: இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!!

Author: Rajesh
4 April 2022, 9:55 pm
Quick Share

கேரளா: அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் தனது ரசிகையை நடிகர் மம்முட்டி நேரில் சந்தித்து மகிழ்வித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரளாவை சேர்ந்த சிறுமி ஒருவர் அரிய வகை ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தனது பிறந்தநாள் அன்று தனக்கு பிடித்த நடிகர் மம்முட்டி தன்னை சந்திக்குமாறு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், வேறு காரணங்களால் நடிகர் மம்முட்டி கொச்சியில் இருப்பதாக அந்த மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுமி குறித்தும், அவரது நிலை குறித்தும் மருத்துவர்கள் நடிகர் மம்முட்டிக்கும் தெரியப் படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, தகவல் கிடைத்ததும் நடிகர் மம்முட்டி உடனே அந்த சிறுமியை நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அவருடன் சிறிது நேரம் உரையாடி சிறுமியின் ஆசையை நிறைவேற்றினார்.

தனது குட்டி ரசிகையில் ஆசையை நிறைவேற்றி அவரை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அதிகம் பேரால் ஷேர் செய்யப்படுகிறது.

Views: - 626

0

0