பெண்ணை கொரோனா வைரஸ் என அழைத்த நபர்..! போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

25 March 2020, 11:05 pm
Chennai_Corona_UpdateNews360
Quick Share

புதுடெல்லி : வடமேற்கு டெல்லியின் முகர்ஜி நகரில் முகத்தில் பான் துப்பிய பின்னர் ஒரு பெண்ணை கொரோனா வைரஸ் என்று அழைத்ததாக 40 வயது நபர் இன்று கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் மாடல் டவுனில் வசிக்கும் கௌரவ் வோஹ்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை, ஒருவர் தான் வந்த வாகனத்தை மெதுவாக்கி, முகத்தில் பான் துப்பியதாகவும், ஒரு தெருவில் தன்னை “கொரோனா வைரஸ்” என்று அழைத்ததாகவும் அந்த பெண் ஒரு அறிக்கையை பதிவு செய்தார் என்று ஒரு உயர் போலீஸ் அதிகாரி கூறினார்.

அதன்பிறகு, முகர்ஜி நகர் காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 506’ன் (ஒரு பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்ட சொல், சைகை அல்லது செயல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, விஜய் நகர் பகுதியின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, வெள்ளை வண்ண வண்டியை தேடினர். வண்டியை அடையாளம் கண்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் இன்று கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.