சட்டமன்ற உறுப்பினருக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது

Author: Udayaraman
8 October 2020, 9:55 pm
Quick Share

திருப்பதி: லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி. உடனடியாக என் வங்கி கணக்கில் பணம் செலுத்தி என்று சட்டமன்ற உறுப்பினருக்கு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த நான்காம் தேதி அன்று ஆந்திர மாநிலம் சித்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜங்களபள்ளி சீனிவாசலுவை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், சித்தூரில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்துவதற்காக லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆகிய நாங்கள் வந்து இருக்கின்றோம். நான் லஞ்ச ஒழிப்புத் துறையில் டிஎஸ்பி ஆக வேலை செய்கிறேன். உங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. என்னுடைய வங்கி கணக்கிற்கு நீங்கள் உடனடியாக பணம் அனுப்பி வைக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் வீட்டிலும் சோதனை நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்து தொலைபேசியை துண்டித்து விட்டார். இது மிரட்டல் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் ஜங்காளபள்ளி சீனிவாசலு சித்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சட்டமன்ற உறுப்பினருடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்து கைது செய்வதற்காக சிறப்பு குழுக்கள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சித்தூரை சேர்ந்த இளைஞர்கள் பலரிடம் தன்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி என்று அறிமுகப்படுத்தி கொண்ட நபர் ஒருவர் அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி பணம் பறித்தது தெரியவந்தது. இந்த நிலையில் இன்று இதுபோன்ற மோசடி புகார்கள் காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்று திரும்பிய மதனப்பள்ளியை சேர்ந்த ஹரி (35) என்பவரை சித்தூரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பணம் கேட்டு சட்டமன்ற உறுப்பினருக்கு மொபைல் போனில் மிரட்டல் விடுத்தது, வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி இளைஞர்களிடம் பணம் பறித்தது ஆகிய குற்றச்சாட்டுகளை ஹரி ஒப்புக்கொண்டார். கைது செய்யப்பட்ட போலி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹரியை இன்று சித்தூர் எஸ் பி செந்தில்குமார் தலைமையில் போலீசார் நிருபர்கள் முன் ஆஜர்படுத்தினர்.

Views: - 38

0

0