மோடி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பதிவு..! ஒடிசா நபர் தேசத்துரோக வழக்கில் கைது..!

4 September 2020, 12:37 pm
narendra_modi_updatenews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க செய்திகளை வெளியிட்டதாக ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குசும்பி கிராமத்தைச் சேர்ந்த அவர், உத்தரப்பிரதேச காவல்துறை குழுவினரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 ஏ (தேசத்துரோகம்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

“உத்தரபிரதேச காவல்துறை ஒடிசாவின் உள்ளூர் காவல்துறையினரின் உதவியை நாடியது. குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய எங்கள் காவலர்கள் குழுவுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கினர்” என்று கட்டாக் காவல் கண்காணிப்பாளர் ஜுகல் கிஷோர் பனோத் தெரிவித்துள்ளார்.

அந்த நபர் மீது உத்தரபிரதேசத்தில் உள்ள சிங்காபலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஒடிசாவின் சாலிப்பூரில் சிறு வணிகத்தை நடத்தி வரும் கைது செய்யப்பட்ட நபரை தற்போது ஒடிசாவில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்து ரிமாண்டில் அவரை உத்தரபிரதேசம் அழைத்துச் செல்ல உ.பி. போலீஸ் குழு திட்டமிட்டுள்ளது.

Views: - 9

0

0