மாஸ் காட்ட முயற்சித்து பல்பு வாங்கிய இளைஞர்! ரைவல் வீடியோ
3 April 2021, 11:00 amஇளைஞர் ஒருவர் சமூக வலைதளங்களில் மாஸ் காட்டுவதற்காக, பைக் மேல் ஏறி நின்று சாகசம் செய்த போது, நிலைதடுமாறி தலைகுப்புற கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஐ.பி.எஸ் அதிகாரி தீபன்ஷு கப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். ‘சமூக வலைத்தளங்களில் மாஸ் காட்டுவதற்காக, தயவு செய்து இது போல சாகசம் செய்ய யாரும் முயற்சிக்காதீர்கள்’ என்ற பதிவுடன் அவர் இந்த வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்.
வீடியோவில் இளைஞர் ஒருவர், பைக் ஓட்டிக்கொண்டிருக்கும் போதே. சீட்டில் ஏறி நிற்க முயற்சி செய்கிறார். பைக்கை பிடிக்காமல், சீட்டின் மேல் ஏறி நிற்க முயலும் போது, நிலைதடுமாறி, சாலையில் தலைகுப்புற விழுகிறார். இந்த அசம்பாவிதத்தால், அவரது தலையிலும், முதுகிலும் காயம் ஏற்பட்டுவிடுகிறது.
கடந்த மாதம் 25 ஆம் தேதி, பகிரப்பட்ட இந்த வீடியோ, 22 ஆயிரத்தும் அதிகமான பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது. 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்து, இந்த வீடியோவை வைரலாக்கி உள்ளனர். 525 பேர் ரீடுவிட் செய்திருக்கின்றனர்.
உயிரை பணயம் வைத்து இதுபோல் செய்யப்படும் பைக் ஸ்டன்ட் அவசியம் இல்லாதது எனவும், உயிர் தப்பிய அவர், மீண்டும் இதுபோன்ற ஸ்டண்ட்களில் ஈடுபட வேண்டாம் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். போக்குவரத்து விதிகளை மதித்தால், அது நமக்கு மட்டுமல்ல, நம்முடன் சாலையில் பயணிக்கும் முகம் தெரியாதவர்களுக்கும் நன்மை விளைவிக்கும். இதனை இவர் போன்ற இளைஞர்கள் எப்போது தான் உணர்ந்து கொள்வார்களோ!!
0
0