தெருநாயை பிடித்து “கசமுசா”வில் ஈடுபட்ட காமக்கொடூரன்..! 6 மாத சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம்..!

12 January 2021, 8:57 pm
Stray_Dogs_UpdateNews360
Quick Share

மகாராஷ்டிராவின் தானே நகரில் தெரு நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக 40 வயது நபருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கி அங்குள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நேற்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், தானே முதல் தர நீதித்துறை மாஜிஸ்திரேட் வி.பி.கண்டரே, விஜய் சால்கேவை குற்றவாளி என்று தீர்ப்பளித்து, அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்தார்

ஐபிசியின் பிரிவு 377’இன் (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) கீழ் இது தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்து நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும் விலங்கு வதை தடைச்சட்டத்தின் கீழ் குற்றவாளிக்கு ரூ 1,050 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

குற்றவாளி கடந்த ஜூலை 2020’இல் தெரு நாயிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் புகார்தாரரின் மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டு குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்கினார்.

Views: - 6

0

0