மூன்று குழந்தைகளை ஆற்றில் வீசிவிட்டு தானும் குதித்த தந்தை..! குடும்பத் தகராறால் நேர்ந்த சோகம்..!

16 August 2020, 7:03 pm
swim_updatenews360
Quick Share

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக 38 வயது நபர் ஒருவர், தனது மூன்று குழந்தைகளையும் ஆற்றில் வீசி விட்டு தானும் குதித்ததாக கூறப்படுகிறது.

அப்பகுதியில் பலத்த மழை பெய்து வரும் நிலையிலும், ஆற்றில் அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

“இந்த சம்பவம் அதிகாலையில் கார்சியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாண்ட் ஆற்றின் பாலத்தில் நடந்தது” என்று ராய்கர் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் தெரிவித்தார்.

எடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேஷ்வர் ரதியா என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், தனது மகன்களான கிர்சாகர் (5), நர்மதா (3) மற்றும் எட்டு மாத தேஜ் பிரகாஷ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் பாரா கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவர் திடீரென பாலத்தின் மீது வாகனத்தை நிறுத்தி, தனது குழந்தைகளை ஆற்றில் வீசி எறிந்தார், பின்னர் அவரும் ஆற்றில் குதித்தார் என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

“தகவல் கிடைத்ததும், மீட்புப் படையினருடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் தேடுதல் பணியைத் தொடங்கினர். இருப்பினும், அவர்களில் யாரும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.” என்று சந்தோஷ் சிங் கூறினார்.

முதற்கட்ட தகவல்களின்படி, தென்கிழக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (எஸ்.இ.சி.எல்) நிறுவனத்தின் மின்சார பிரிவில் பணிபுரியும் ரதியா எடுத்த தீவிர நடவடிக்கைக்கு குடும்ப தகராறு தான் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் இது தொடர்பாக மேலதிக விசாரணை நடந்து வருகிறது என சந்தோஷ் சிங் மேலும் தெரிவித்தார்.

Views: - 0 View

0

0