பல மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட மங்களூரு கடற்கரை: திரண்ட மக்கள்கூட்டம்…!!

2 November 2020, 2:04 pm
mangalore beach - updatenews360
Quick Share

கர்நாடகாவின் மங்களூவில் உள்ள கடற்கரை பல மாதங்களுக்கு பிறகு இன்று பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

மங்களூரு: நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மராட்டியம், தமிழகம் ஆகியவை கொரோனா பாதிப்பில் அடுத்தடுத்து அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை கொண்டவையாக உள்ளன.

சமீப நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் சரிவடைந்து வருகிறது. அதே சமயம் குணமடைவோர் விகிதமும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்த காரணத்தினால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கான மால்கள், கடற்கரைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள பனம்பூர் கடற்கரை பல மாதங்களுக்கு பின் சுற்றுலா பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நீண்ட நாட்களாக கடல் காற்றை வாங்காமல் தவித்து போயிருந்த மக்கள் கடற்கரையில் குவிந்தனர்.

Views: - 20

0

0