செல்போன் திருடனை துரத்திப் பிடித்த காவலர்…!! சினிமா பாணியில் துரத்திப்பிடித்த காவலருக்கு குவியும் பாராட்டுகள்…!

Author: Udhayakumar Raman
13 January 2022, 10:35 pm
Quick Share

மங்களூருவில் கூலித் தொழிலாளியின் செல்போனை பறித்துச் சென்ற திருடனை காவலர் ஒருவர் விரட்டி பிடித்து கைது செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம், மங்களூருவில் உள்ள நேரு மைதானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த, ராஜஸ்தானைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரிடம் இருந்து 2 பேர் செல்போனை பறித்துக் கொண்டு சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தொழிலாளியும் திருடர்களை விரட்டியுள்ளார். அப்போது, காரில் வருண் என்ற காவலர் வந்துள்ளார். 2 பேர் ஓடுவதைப் பார்த்த காவலர், காரை நிறுத்தி தொழிலாளியைப் பிடித்து விசாரித்துள்ளார்.

தன்னுடைய செல்போனைத் திருடிக்கொண்டு ஓடுவதாகக் கூறியுள்ளார் தொழிலாளி. சொன்னதுதான் தாமதம், காவலர் அந்தத் திருடர்களை விரட்டிப் பிடிக்க ஓடினார். திருடர்கள் குறுக்குப் பாதையில் ஓட, காவலரும் பின்னாலேயே ஓடிச்சென்று விரட்டிப்பிடித்தார். பின்னர் உரியவரிடம் செல்போனை காவலர் ஒப்படைத்தார். பட்டப்பகலில் திருடர்களை காவலர் விரட்டிச்சென்ற சம்பவம், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருடர்களை விரட்டிச்சென்று பிடித்த காவலர் வருணுக்கு மங்களூர் காவல் துறை ஆணையர் 10 ஆயிரம் ரூபாய் வழங்கிப் பாராட்டியுள்ளார்.

Views: - 157

0

0