ஒரே கல்லூரியில் 40 மாணவர்களுக்கு கொரோனா..! இழுத்து மூடி சீல் வைத்தது நகராட்சி நிர்வாகம்..!

4 February 2021, 11:13 am
mangaluru_college_UpdateNews360
Quick Share

தக்ஷினா கன்னட மாவட்டமான மங்களூருவின் உல்லாலில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரி, அதன் 40 மாணவர்ளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சீல் வைக்கப்பட்டது. 

கொரோனா தொற்றால் கடந்த வருடம் மார்ச் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டன. 

பின்னர் கொரோனா தொற்று படிப்படியாக குறியானது வந்த நிலையில், கர்நாடகாவில் மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட கல்லூரிகள் டிசம்பர் 1 முதல் திறக்கப்பட்டு கொரோனா விதிமுறைகளுடன் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மங்களூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பயில கேரளாவிலிருந்து வந்திருந்த மாணவர்களில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு சீல் வைக்க உல்லால் நகர நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையொட்டி, உல்லால் நகராட்சி ஆணையர், மாவட்ட சுகாதார அதிகாரி மற்றும் நோடல் அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று அதை ஒரு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்தனர்.

Views: - 14

0

0