உடல் நலம் தேறியதை அடுத்து மன்மோகன் சிங் வீடு திரும்பினார்

Author: kavin kumar
31 October 2021, 9:21 pm
manmohansingh-updatenews360
Quick Share

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலம் தேறியதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீரென டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மன்மோகன் சிங் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.மேலும் டெங்குவால் அவருடைய இதயம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை இதய நோய் வல்லுநர் நிதீஷ் நாயக் பரிசோதித்து வந்தார். அவருக்குக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு டெங்கு உறுதி ஆகி அதற்கும் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தற்போது உடல்நிலை தேறி பூரண குணம் அடைந்துள்ளார். இதையொட்டி அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளார். கிட்டத்தட்ட 19 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 253

0

0