இன்று முதல் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் : மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2023, 9:11 am
Kerala - Updatenews360
Quick Share

சமீப நாட்களாக கொரோனா தொற்று இந்தியா முழுவதும் மீண்டும் பரவி வருகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உள்ள நிலையில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மத்திய அரசும் மாநில அரசுகளை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தி வருகிறது. இந்தநிலையில் கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் பொது இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என கேரள மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை மேலும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவை அடுத்து தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் விரைவில் முக கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 138

0

0