5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாஸ்க் தேவையில்லை: புதிய வழிகாட்டு முறைகளை வெளியிட்டது மத்திய அரசு..!!

10 June 2021, 2:08 pm
Quick Share

புதுடெல்லி: 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அவசியமில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கோவிட் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ரெம்டெசிவிர் மற்றும் இதர அங்கீகாரம் பெற்ற மருந்துகள் எதுவும் குழந்தைகளுக்குக் கொடுக்க பரிந்துரைக்கப்படவில்லை.

18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரெம்டெசிவிரின் பயன்பாடு பாதுகாப்பானது என்பது தொடர்பாக எந்த உறுதியான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. அறிகுறி இல்லாத அல்லது கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு ஸ்டீராய்ட் மருந்துகள் கொடுக்கப்படக் கூடாது. அது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும். மேலும், 5 வயது மற்றும் அதற்குட்பட்ட வயதுடைய குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை.

அதுபோல 6 முதல் 11 வயதுடைய குழந்தைகள் பெற்றோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முகக்கவசம் அணியலாம். 12 முதல் 18 வயதுடைய குழந்தைகளும் சரியான முறையில் பெற்றோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முகக்கவசம் அணியலாம். 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு கட்டப்படுத்தும் அளவில் மட்டுமே சி.டி ஸ்கேன்களை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Views: - 171

0

1