செப்.,11ம் தேதி முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு : மத்திய அமைச்சர் மாண்டவியா அறிவிப்பு

13 July 2021, 7:30 pm
NEET_2021_UpdateNews360
Quick Share

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு வரும் செப்.,11ம் தேதி நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை, அந்தத் தேர்வின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை என இருகட்டமாக நீட் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இளநிலை மருத்துவப் படிப்பில் சேருபவர்களுக்கான நுழைவுத்தேர்வு வரும் செப்.,12ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.

இந்த நிலையில், நடப்பாண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “நீட் தேர்வை வரும் செப்டம்பர் 11ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளோம். இளம் மருத்துவ ஆர்வலர்களுக்கு வாழ்த்துகள்,” எனப் பதிவிட்டுள்ளார்.

இன்று இளநிலை நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் மாலை 5 மணி முதல் neet.nta.nic.in என்ற தளத்திலிருந்து விண்ணப்பித்து வருகின்றனர்.

Views: - 149

0

0