ரஃபேல் விமானத்தை ஓட்டிய முதல் இந்திய விமானி..! யார் இந்த ஹிலால் அகமது ரதார்..?

29 July 2020, 4:42 pm
hilal_ahmed_rather_updatenews360
Quick Share

இந்திய விமானப்படையின் தாக்குதல் திறனை அதிகரிக்கும் வகையில் பிரான்ஸிடமிருந்து 36 ரஃபேல் விமானங்களுக்கான ஒப்பந்தம் போட்டிருந்த நிலையில் தற்போது முதற்கட்டமாக ஐந்து விமானங்கள் இந்தியாவின் அம்பாலா விமானப்படை தளத்தை வந்தடைந்துள்ளன. பிரான்ஸிலுள்ள டஸ்ஸால்ட் நிறுவனத்தின் விமானப்படை தளத்திலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட இந்த விமானங்கள் கேப்டன் ஹர்கிரத் சிங் தலைமையில் இந்தியா வந்தடைந்தது.

ரஷ்ய சுகோய் -30 விமானங்களுக்குப் பிறகு 23 ஆண்டுகளில் ஐ.ஏ.எஃப் இல் சேர்க்கப்பட்ட முதல் இறக்குமதி செய்யப்பட்ட போர் ஜெட் விமானம் இதுவாகும். முதல் சு -30 ஜூன் 1997’இல் இந்திய விமானப்படையில் சேவையில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்திய விமானப்படைக்கான ரஃபேல் போர் விமானங்கள் திட்டமிட்ட நேரத்தில் சரியாக வர காரணமாக திகழ்ந்தவர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஏர் கமாண்டர் ஹிலால் அகமது ரதார் ஆவார். ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிலால் அகமது, மத்திய அரசு நடத்தும் சைனிக் பள்ளியில் படித்து பின்னர் நேஷனல் டிபென்ஸ் அகாடெமியில் பட்டம் பெற்றார்

1988’ல் இந்திய விமானப்படையில் லெப்டினன்ட்டாக பணியில் இணைந்த ஹிலால், கடந்த வருடம் ஏர் கமாண்டராக பதவி உயர்வு பெற்றார். ஒப்பந்தத்தின் படி ரஃபேல் விமானங்களை உரிய நேரத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரும் சவாலான பணியை பிரான்சில் தங்கியிருந்து செய்ய மத்திய அரசு ஹிலாலையே தேர்ந்தெடுத்தது. இவரின் முன்முயற்சியால் தான் கொரோனாவால் மிகப்பெரிய அளவில் பிரான்ஸ் பாதிக்கப்பட்டிருந்தால் மிகச் சரியான நேரத்தில் ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளன.

பிரான்சில் விமானங்கள் இந்தியாவுக்கு வழியனுப்பி வைக்கப்பட்ட நிகழ்விலும் ஹிலால் இந்தியத் தூதர் ஜாவேத் அஷ்ரப்புடன் இணைந்து பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.

மிக், மிராஜ் மற்றும் கிரண் ரக விமானங்களை 3,000 மணிநேரத்திற்கு அதிகமாக ஓட்டிய அனுபவம் வாய்ந்த ஹிலால், மிக உயரிய தொழில்நுட்பங்கள் வாய்ந்த ரஃபேல் விமானங்களை முதன் முதலில் இயக்கியுள்ளார். இவரின் ஆலோசனைகளுக்கு ஏற்பவே இந்திய சூழலுக்கு ஏற்றார் போல் டஸ்ஸால்ட் நிறுவனம் விமானத்தில் சில மாற்றங்களை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply