இவர் தான் உலகின் மிக அழுக்கான மனிதர்! எவ்வளவு ஆண்டுகள் குளிக்கவில்லை தெரியுமா?

20 January 2021, 9:10 am
Quick Share

தனது உடலில் ஒரு சொட்டு தண்ணீர் கூட படாமல் கடந்த 65 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். அவர் தான் உலகின் அழுக்கான மனிதராம்! போட்டோவை பார்க்கும் போதே மூக்கை பொத்திக் கொள்ள தோன்றுகிறதா?

உலகின் பல வித்தியாச மனிதர்கள் குறித்து தினமும் விதவிதமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த நபர் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இதனை கேட்டால், உங்களுக்கு குமட்டி கொண்டு தான் வரும். ஈரானில் வசிக்கும் 83 வயதான அமோ ஹாஜி என்பவருக்கு தண்ணீரை கண்டால் அவ்வளவு பயமாம்.

குளித்தாலோ, தண்ணீர் உடலில் பட்டாலோ தனக்கு நோய் வந்துவிடும் என்பது அவரது ஆழ்மனதில் ஊறிவிட்டது. இதனாலேயே கடந்த 65 ஆண்டுகளாக அவர் குளிக்கவில்லையாம். ஏன்? ஒரு சொட்டு தண்ணீர் கூட அவர் உடலில் படவில்லையாம். குளிக்காததால் தான், உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைக்க முடிகிறது என கூறுகிறார் இந்த அழுக்கு மனிதர்.

இவர்தான் தற்போது உலகின் மிக அழுக்கான நபராக அறியப்படுகிறார். இதனாலேயே இவரால் மக்களோடு மக்களாக வசிக்க முடியாமல், கிராமத்திலிருந்து தொலைவில் தரையில் கட்டப்பட்ட குழிகளில் வசிக்கிறார். சிகரெட்டுகள் பிடிப்பதில் அலாதி பிரியம் கொண்டிருக்கிறார்.

இவரது உணவுப்பழக்கமும் வித்தியாசமாக இருக்கிறது. வீட்டில் சமைத்த உணவுகள் இவருக்கு பிடிக்காதாம். இறந்த விலங்குகளின், அழுகிய இறைச்சியை சாப்பிட தான் பிடிக்குமாம். வாந்தி எடுத்து விடாதீர்கள்.. இன்னும் கேளுங்கள்.. சாலையில் விபத்தில் அடிபட்டு இறந்த விலங்குளின் கெட்டுப்போன இறைச்சியை விரும்பி சாப்பிடுவாராம்.. ஐயையே.. யாரு சாமி இவரு என்கிறீர்களா…

Views: - 0

0

0