பெண்ணின் வயிற்றில் 24 கிலோ கட்டி..! வெற்றிகரமாக அகற்றிய மேகாலயா மருத்துவர்கள்..! பாராட்டிய முதல்வர்..!
5 August 2020, 5:26 pmமேகாலயாவில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவமாக, கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு பெண்ணின் அடிவயிற்றில் இருந்து 24 கிலோ கட்டியை மருத்துவர்கள் அகற்றினர்.
கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள ஜாம்ஜே கிராமத்தைச் சேர்ந்த 37 வயதான பெண், கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் ஜூலை 29 அன்று துரா மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஐசில்டா சங்மா, கிட்டத்தட்ட மூன்று மணி நேர அறுவை சிகிச்சையில் இரண்டு மகப்பேறு மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவர்கள் குழு இந்த அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டது எனத் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 3 அன்று. நோயாளி மருத்துவ கவனிப்பின் கீழ் நிலையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பேசிய மருத்துவமனை கண்காணிப்பாளர், கட்டி புற்றுநோயா என்பதைக் கண்டறிய பயாப்ஸிக்கு அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
கட்டி அகற்றும் அறுவை சிகிச்சைக்கு முதலமைச்சர் கான்ராட் சங்மா இன்று மருத்துவர்களைப் பாராட்டினார்.
“துரா மாவட்ட மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவமனையின் (டி.எம்.சி.எச்) மருத்துவர்கள் குழு கிழக்கு கரோ ஹில்ஸில், ஒரு நோயாளியின் அடிவயிற்றில் இருந்து 24 கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றியது. இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு டாக்டர் வின்ஸ் மோமின் மற்றும் குழுவினரை நான் வாழ்த்துகிறேன். விரைவில் முழுமையாக குணமடைய நோயாளிக்கு வாழ்த்துக்கள்.” என முதலமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.