கடலில் நொறுங்கி விழுந்த மிக் 29 கே விமானம் : மாயமான விமானியை தேடும் பணி தீவிரம்!!
29 November 2020, 10:51 amமிக் 29கே விமானம் பயிற்சியின் போது கடலில் விழுந்து நொறுங்கிய நிலையில் விமானியை தேடும் பணியில் போர் கப்பல்கள் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை மிக் 29கே விமானத்தில் இரண்டு விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது விமானம் திடீரென விபத்தில் சிக்கி அரபிக் கடலில் விமானம் நொறுங்கி விழுந்தது.
இந்த நிலையில் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றொர விமானியான இநிஷாந்த் சிங் என்ற விமானி மாயமானார்.
விமானம் நொறுங்கி விழும் நேரத்தில் கடலில் பாராசூட் மூலம் குதித்த விமானி உயிர் தப்பியிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
போர்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் கடற்படையினர் விமானிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மிக் 28 கே விமானம் கடலில் நொறுங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0