மில்கா சிங் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு… பஞ்சாப் முதலமைச்சர் அறிவிப்பு

19 June 2021, 7:31 pm
milkha singh - updatenews360
Quick Share

சண்டிகர்: முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடக்கும் என்று பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் கடந்த மாதம் கொரோனா தொற்றால் மொகாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருந்ததால் குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த மாத தொடக்கத்தில் மில்கா சிங்குக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் நேற்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவரது மறைவிற்கு விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மில்கா சிங் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடக்கும் என்று பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். மேலும், அவரின் நினைவாக ஒருநாள் அரசு விடுமுறை விடப்படும் எனவும் தெரிவித்தார்.

Views: - 184

0

0