வங்கிகள் கடன் மர மறுத்தால் புகார் தரலாம்..! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

1 August 2020, 10:36 am
Nirmala_Sitharaman_Updatenews360
Quick Share

டெல்லி: தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் மர மறுத்தால் புகார் தரலாம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.

இந்திய வர்த்தகம், தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

கொரோனாவால் ஓட்டல் தொழில் உள்பட பல தொழில் நிறுவனங்கள்  பாதிக்கப்பட்டுள்ளன. தங்களின் கடன்களை மறுசீரமைக்க வேண்டும், கடன் தவணை செலுத்தக்கூடிய கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன.

அதை நிறைவேற்ற ரிசர்வ் வங்கியுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதில் சிக்கல் நிலவுகிறது என்று இந்த கூட்டமைப்பினர் கூறினர்.

அந்த திட்டத்தின் அடிப்படையின் கடன் வழங்கமுடியாது என்று வங்கிகள் கூறவோ, மறுக்கவா முடியாது. ஒருவேளை வங்கிகள் மறுத்தால் அதுகுறித்து என்னிடம் புகார் தெரிவிக்கலாம். நான் அதற்கு நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.

Views: - 8

0

0