நேபாளம் டு மத்தியபிரதேசம்..! பேஸ்புக் நண்பரைக் காண தன்னந்தனியே பயணம் செய்த 16 வயது சிறுமி..!

30 November 2020, 3:15 pm
FaceBook_Girl_UpdateNews360
Quick Share

நேபாளத்திலிருந்து தனது பேஸ்புக் நண்பரை சந்திக்க மத்தியபிரதேசம் வரை தனியாக பயணம் செய்து வந்த சிறுமியை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் வசிக்கும் 16 வயது சிறுமி, மத்திய பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் உள்ள அஷ்டா நகரில் வசிக்கும் 20 வயது இளைஞருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேஸ்புக் மூலம் நட்பை வளர்த்தது வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென காத்மாண்டுவிலிருந்து இந்தியாவுக்கு அந்த சிறுமி தனது பேஸ்புக் நண்பரைக் காண புறப்பட்டார். அவர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பேருந்துகளில் பயணம் செய்து ஒருவழியாக கடந்த சனிக்கிழமையன்று தனது பேஸ்புக் நண்பரின் இருப்பிடத்தை அடைந்துள்ளார்.

இதற்கிடையே அஷ்டாவில் உள்ள ஒரு மருத்துவ கடையில் பணிபுரியும் சிறுமியின் பேஸ்புக் நண்பர் விசயமறிந்து, சிறுமியின் வருகை குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இந்நிலையில் காவல்துறை சிறுமியை மீட்டு, கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் போபாலின் குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரை திருப்பி அனுப்புவது குறித்து குழு கூடுதல் நடவடிக்கை எடுக்கும் என்று போலீஸ் அதிகாரி மோகன் சர்வன் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் நேபாளம் இடையே பயணம் செய்ய விசா எதுவும் தேவையில்லை என்பதால், அந்த 16 வயது சிறுமி, எல்லையில் அகப்படாமல் மத்தியபிரதேசம் வரை வந்துள்ளார்.

Views: - 0

0

0