பாகிஸ்தான் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் ஏன்..? இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கொடுத்த விளக்கம்.. திருப்தியடையாத அண்டைநாடு!!

Author: Babu Lakshmanan
12 March 2022, 4:43 pm
Quick Share

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகனை தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவால் கடந்த 9ம் தேதி ஏவப்பட்ட சூப்பர் சோனிக் ஏவுகனை, ஹரியானா மாநிலத்தின் சிர்சா பகுதியில் இருந்து 124 கி.மீ. தொலைவில் உள்ள பாகிஸ்தான் நாட்டின் மியான் நகரத்திற்கு அருகே விழுந்தது. இந்த ஏவுகணை ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. ஏவுகணை தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டு உயிர்சேதம் ஏற்படவிட்டாலும், பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, வழக்கமான பரிசோதனையின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்த விபத்து குறித்து உயர்கட்ட விசாரணைக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விளக்கத்தை பொருட்படுத்திக் கொள்ளாத பாகிஸ்தான், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளது.

Views: - 809

0

0