அ.ராஜாவின் தேர்தல் வெற்றி செல்லாது… மதம் மாறியதால் வந்த சிக்கல் ; நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் அதிர்ச்சியில் ஆளும்கட்சி..!!
Author: Babu Lakshmanan20 மார்ச் 2023, 8:21 மணி
ஆளும் கட்சியின் எம்எல்ஏ வெற்றி செல்லாது என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு நடந்த கேரள சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. முதலமைச்சராக பினராயி விஜயன் இருந்து வருகிறார்.
தேவிக்குளம் தனித் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அ.ராஜா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ராஜா, கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய நிலையில், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், போலியாக சாதி சான்றிதழ் வழங்கி ரிசர்வ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக அ.ராஜாவின் வெற்றியை எதிர்த்து இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் தலைமையிலான யூடிஎஃப் கூட்டணி வேட்பாளர் டி.குமார் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எம்எல்ஏ ராஜாவின் வெற்றி செல்லாது என்று பரபரப்பு தீர்ப்பை அளித்தது. இவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர் என்பதைச் சுட்டிக்காட்டி, அவர் கொடுத்த சாதி சான்றிதழ் செல்லாது என நீதிமன்றம் தெரிவித்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
0
0