வட மாநிலங்களில் மின்னல் தாக்கியதில் 68 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்…தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!

12 July 2021, 4:19 pm
modi conodlance - updatenews360
Quick Share

லக்னோ : உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த 2 நாட்களில் மின்னல் தாக்கி 68 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், கோட்டா, ஜலாவா, டோல்பூர் மாவட்டங்களில் நேற்று மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

lightening death - updatenews360

ஜெப்பூரில் அமீர் அரண்மனை முன் நின்று செல்பி எடுத்துக் கொண்டு இருந்த போது மின்னல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் ஆணையிட்டுள்ளார்.

இதனிடையே மத்தியப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கிய சம்பவத்திற்கு மத்தியில் உத்தரகண்டில் பெய்து வரும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மின்னல் தாக்கியதால் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைத் தொகையையும் அறிவித்துள்ளார்.

Modi Wish - Updatenews360

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் சில பகுதிகளில் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து துயருற்றேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 கருணைத் தொகையாக வழங்கப்படும்: பிரதமர் திரு மோடி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 128

0

0