இந்தியாவில் தணியும் கொரோனா 2ம் அலை: வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை..!!

12 July 2021, 6:05 pm
modi_updatenews360
Quick Share

புதுடெல்லி: வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை பரவல் சற்று தணியத்தொடங்கியுள்ளது. தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

India_Corona_UpdateNews360

கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து குறைந்து வரும் சூழலில், வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகலாயா, அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

காணொலி காட்சி வாயிலானக நாளை காலை 11 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

Views: - 148

0

0