கர்நாடகாவில் வெடிமருந்து லாரி வெடித்த விபத்தில் 8 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்..!!

22 January 2021, 9:26 am
Modi_UpdateNews360
Quick Share

டெல்லி: கர்நாடகாவில் வெடிமருந்து லாரி வெடித்தில் 8 பேர் உயிரிழந்தற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டம் ஹூன்சூரில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிக்கு லாரியில் வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு சென்றபோது நேற்றிரவு திடீரென லாரி வெடித்து விபத்துக்ககுள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சிவமோகா மாவட்ட ஆட்சியர் சிவக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த சிமோகா மட்டுமின்றி, தாவணகரே, உத்தர கன்னடா, சிக்கமகளூரு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் பயங்கர சத்தமும், நில அதிர்வும் உணரப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, விபத்து நடைபெற்ற இடத்தில் விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வெடித்தில் 8 பேர் உயிரிழந்தற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவில், சிவமோகாவில் உயிர் இழப்பால் வலி மற்றும் துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0