பஞ்சாப் முன்னாள் டிஜிபியைக் கைது செய்ய பிடி வாரண்ட்..! மொஹாலி நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

12 September 2020, 7:30 pm
Former_Punjab_DGP_Saini_UpdateNews360
Quick Share

1991 பல்வந்த் சிங் முல்தானி காணாமல் போன வழக்கு தொடர்பாக முன்னாள் பஞ்சாப் டிஜிபி சுமேத் சிங் சைனிக்கு எதிராக மொஹாலி நீதிமன்றம் இன்று கைது வாரண்ட் பிறப்பித்தது. ஒரு உத்தரவின்படி, சைனியை கைது செய்து செப்டம்பர் 25’ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது. 

1991’ல் சண்டிகர் தொழில்துறை மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனில் ஜூனியர் இன்ஜினியராக பணிபுரிந்தபோது முல்தானி காணாமல் போனது தொடர்பாக கடந்த மே மாதம் சைனி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததை அடுத்து, இந்த விவகாரத்தில் முன் ஜாமீன் கோரி சைனி உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் அல்லது விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிய சைனியின் இரண்டாவது மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அவரது ஜாமீன் மனுவை செப்டம்பர் 1’ம் தேதி மொஹாலி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னாள் சண்டிகர் காவல்துறை அதிகாரிகளான இன்ஸ்பெக்டர் ஜாகீர் சிங் மற்றும் முன்னாள் ஏ.எஸ்.ஐ. குல்தீப் சிங் ஆகிய இரு குற்றவாளிகளும் முல்தானி காணாமல் போன வழக்கில் அப்ரூவராக மாறிய பிறகு ஐ.பி.சி.யின் பிரிவு 302’ன் கீழ் காவல்துறை கடந்த மாதம் கொலை குற்றச்சாட்டை சேர்த்தது.

இந்நிலையில் செப்டம்பர் 3’ம் தேதி பஞ்சாப் காவல்துறையினர், சைனி தனக்கு ஒதுக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை விட்டு வெளியேறும்போது தலைமறைவாகிவிட்டார். அவர் தனது சண்டிகர் இல்லத்திலிருந்து பஞ்சாப் காவல்துறை பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஜாம்மர் வாகனம் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்கள் இல்லாமல் புறப்பட்டார்.

1982 தொகுதி ஐ.பி.எஸ் அதிகாரியான சைனி நாட்டின் மிக இளைய டி.ஜி.பி.’யாக பதவியேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. முல்தானி விவகாரம் வெடித்ததையடுத்து அவர் 2015’ல் டிஜிபி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே சைனி 2018’இல் ஓய்வு பெற்றார்.

1991’ல் சண்டிகரில் அப்போதைய மூத்த போலீஸ் சூப்பிரண்டாக சைனி இருந்த போது, பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் மொஹாலியில் வசிக்கும் பால்வந்த் முல்தானியை போலீசார் அழைத்துச் சென்றனர்.

இருப்பினும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகன் பல்வந்த் முல்தானி குர்தாஸ்பூரில் கடியன் காவல்துறையின் காவலில் இருந்து தப்பித்ததாக போலீசார் பின்னர் கூறினர். இதையடுத்து ஜலந்தரில் வசிக்கும் பல்வந்த் முல்தானியின் சகோதரர் பல்விந்தர் சிங் முல்தானியின் புகாரின் பேரில் சைனி மற்றும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பஞ்சாப் காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு பல இடங்களில் சோதனைகளை நடத்திய போதிலும் சைனி தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார்.

சிறப்பு விசாரணைக்குழு ஏற்கனவே பஞ்சாப், சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் பல இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளது. ஆனால் முன்னாள் மாநில காவல்துறைத் தலைவரை கைது செய்ய முடியவில்லை.

பஞ்சாப் முன்னாள் போலீஸ் டைரக்டர் ஜெனரல் சைனிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்ததற்காக போலீசார் இன்று நீதிமன்றத்தை நாடினர். சிறப்பு அரசு வக்கீல் சர்தேஜ் சிங் நருலா, சைனியை கைது செய்ய வாரண்ட் இல்லாத நிலையில் பஞ்சாப் போலீஸ் குழு மற்ற மாநிலங்களின் போலீசாரிடம் உதவி பெறுவதில் தடைகளை எதிர்கொள்கிறது என்றார்.  

இதையடுத்து அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து வரும் செப்டம்பர் 25’ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்துமாறு பஞ்சாப் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Views: - 12

0

0