இந்தியாவின் சிறந்த முதல்வர் யோகி ஆதித்யநாத்..! தொடர்ந்து மூன்றாவது முறையாக அசத்தல்..! MOTN சர்வே முடிவு வெளியீடு..!

9 August 2020, 2:52 pm
Yogi_UpdateNews360
Quick Share

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதிதயந்த் சமீபத்திய இந்தியா டுடே-கார்வி இன்சைட்ஸ் மூட் ஆஃப் தி நேஷன் (MOTN) கணக்கெடுப்பில் இந்தியாவின் சிறந்த செயல்திறன் மிக்க முதல்வராக இடம் பிடித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத் மொத்த வாக்குகளில் 24 சதவீதத்தைபெற்றுள்ளார். சமீபத்திய MOTN கணக்கெடுப்பின்படி, தொடர்ந்து மூன்றாவது முறையாக சிறந்த முதல்வராக யோகி ஆதித்யநாத் இடம் பிடித்துள்ளார். ஆதித்யநாத்தின் கீழ் உள்ள உத்தரப்பிரதேச அரசு அண்மையில் மாநிலத்தில் கடத்தல் மற்றும் கொலை சம்பவங்கள் தொடர்பாக பின்னடைவை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையிலும் முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.

சமீபத்திய கணக்கெடுப்பின்படி, ஏழு சிறந்த முதலமைச்சர்களில் ஆறு பேர் பாஜக அல்லாத மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பது இதில் ஆச்சரியப்பட வைக்கும் விசயமாகும். இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலும், மூன்றாம் இடத்தில் ஜெகன் மோகன் ரெட்டியும் நான்காம் இடத்தில் மம்தா பானர்ஜியும் உள்ளனர்.

முன்னதாக ஜனவரி 2020 MOTN கணக்கெடுப்பில், யோகி ஆதித்யநாத், 18 சதவீத வாக்குகளைப் பெற்று, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோரை வீழ்த்தி, முதலிடத்தை தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

2019 ஜனவரியில் நடத்தப்பட்ட MOTN கணக்கெடுப்பில் அப்போது முதலிடத்தில் இருந்த மம்தா பானர்ஜியை விஞ்சி 2019 ஆகஸ்டில் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்தார். அதையடுத்து தற்போது வரை முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.

MOTN வாக்கெடுப்பை டெல்லியைச் சேர்ந்த சந்தை ஆராய்ச்சி நிறுவனம் ஜூலை 15, 2020 முதல் ஜூலை 27, 2020 வரை நடத்தியது.

இந்த வாக்கெடுப்பு பாரம்பரியமாக நேருக்கு நேர் நேர்காணல் முறையைப் பயன்படுத்தி நடத்தப்படுகிறது. இருப்பினும், கணக்கெடுப்பின் இந்த பதிப்பில், கொரோனா பாதிப்பு காரணமாக, அனைத்து நேர்காணல்களும் ஒரு நிலையான கட்டமைக்கப்பட்ட கேள்வித்தாளைப் பயன்படுத்தி தொலைபேசியில் நடத்தப்பட்டன. அவை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.

Views: - 7

0

0