ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலத்தில் சோகம்: மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்டோர் பலி..!!

12 July 2021, 10:30 am
lightening death - updatenews360
Quick Share

ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மின்னல் தாக்கியதில் 7 குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மின்னல் தாக்கியதில் 7 குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மின்னல் தாக்கியதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 30 பேர் பலியாகினர். பிரயாக்ராஜ் மாவட்டத்தில் 14 பேரும், கான்பூரில் 5 பேரும், கெளசாம்பி மாவட்டத்தில் 4 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

lightening_Bihar_UpdateNews360

இதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் 19 பேர் மின்னல் தாக்கி பலியாகினர். ஜெய்ப்பூர் அருகே சுற்றுலா தலமான அமர் அரண்மனையின் கண்காணிப்பு கோபுரத்தில் சுற்றுலா பயணிகள் சிலர் மழையை ரசித்த வண்ணம் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியுள்ளது.

இதில் 7 குழந்தைகள் உள்பட 19 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 17 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே மின்னல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்க அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

Views: - 110

0

0