அம்மாகணக்கு படம் போல மகனுடன் தேர்வு எழுதிய தாய்!

Author: Udayaraman
29 July 2021, 8:29 pm
Quick Share

எர்ணாகுளத்தில் தனது மகனுடன் சேர்ந்து தாய் ஒருவர் பிளஸ்-1 தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் சைனா பாபீவி (வயது59). அழகு கலை நிபுணரான இவருக்கு படிப்பின் மீது தீவிர ஆர்வம் இருந்த போதிலும் அவரால் பள்ளி கல்வியை முடிக்க முடியவில்லை.இவரது மகன் இர்பான்(27). இவர் அழகு கலை நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி படிப்பு தேர்வில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் இருவரும் எப்படியாவது பிளஸ்-1 தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்தனர்.இதனால் இருவரும் வீட்டில் பாடங்களை படித்து வந்தனர். அப்பகுதியில் உள்ள கற்றல் மையத்தில் சேர்ந்து பிளஸ்-1 படித்து தேர்வு எழுத பயிற்சி பெற்று வந்தனர். இந்த நிலையில் இருவரும் எர்ணாகுளத்தில் உள்ள அரசு பள்ளியில் தேர்வு எழுதினர். தாயும், மகனும் ஒரே பள்ளியில் தேர்வு எழுதியது அங்கு வந்திருந்த பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

Views: - 94

0

0