ஆன்லைன் வகுப்பை கவனிக்காத 4 வயது மகன்: தலையணையால் அமுக்கி கொன்ற தாய்…குற்ற உணர்ச்சியில் தாயும் தற்கொலை..!!
Author: Aarthi Sivakumar12 August 2021, 4:20 pm
மகாராஷ்டிரா: ஆன்லைனில் பாடம் ஒழுங்காக படிக்காததால் 4 வயது மகனை கொன்று விட்ட தாய் அதன் பின்னர் மகனை கொன்ற குற்ற உணர்ச்சியில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் நாசிக் அருகே பாத்தார்டி பாட்டா பகுதியில் சாய் சித்தி அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்தவர் சாகர்பாட்டக். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு ரிதான் என்ற மகன் இருந்தான். ரிதான் மழலையர் பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தான்.
தற்போது கொரோனா காலம் என்பதால் ஆன்லைனில் பாடம் நடந்து வருகிறது. ஆன்லைனில் பாடத்தை கவனிக்கச் சொல்லி தாய் சிக்கா மகனிடம் கண்டிப்பு காட்டி வந்திருக்கிறார். ஆனால் ரிதான் விளையாட்டுத்தனமாக இருந்து பாடத்தை கவனிக்காமல் இருந்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த சிக்கா, படுக்கை அறையில் இருந்த தலையணையால் ரிதான் முகத்தில் வைத்து அமுக்கி கொலை செய்திருக்கிறார்.
இதில் சிறுவனின் ரிதான் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து உயிரிழந்திருக்கிறான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிக்கா, பெற்ற மகனையே இப்படி கொடூரமாக கொலை செய்து விட்டோமோ என்ற பதற்றத்தில் தூக்கிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆன்லைன் வகுப்பில் சரிவர படிக்காத 4 வயது மகனை கொன்று தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0