டிஷ்யூ பேப்பரில் உருவான மல்லிகை பூ! அசத்திய அம்மாவுக்கு நெட்டிசன்கள் பாராட்டு

26 February 2021, 9:07 am
Quick Share

தன் மகளுக்காக டிஷ்யூ பேப்பரில் நம்ப முடியாத அளவுக்கு அச்சு அசல் உண்மையான மலர் போன்று, கஜ்ரா (மல்லிகை பூ) தயாரித்த அம்மாவுக்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அம்மாக்கள் தங்கள் குழந்தைகளின் முகத்தில் புன்னகையை வரவழைக்க தங்களால் என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்வார்கள். அப்படித்தான் ஒரு இந்திய தாய், தனது மகளுக்கு டிஷ்யூ பேப்பரில் மல்லிகை பூ தயாரித்து கொடுத்து அசத்தி உள்ளார். அதனை பார்க்கும் போது உண்மையான மல்லிகை போலவே உள்ளது. மணிக்கணக்கில் உட்கார்ந்த இதனை தயாரித்ததால், அந்த அம்மாவுக்கு மூட்டு வலி வந்ததாம். ஆனாலும், அவர் வெற்றிகரமாக, கஜ்ராவை உருவாக்கினார்.

சுரேகா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதில் பின்னப்பட்ட மல்லிகை பூ இருந்தது. அந்த புகைப்படத்தை பகிர்ந்த அவர், இது டிஷ்யூ பேப்பரில் உருவானது. எனக்காக என் அம்மா செய்தார் என பதிவிட்டிருந்தார். இதனை கண்டு நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஏனெனில், அதனை பார்க்க உண்மையான பூக்களை போன்றே இருந்தது. தலையில் சூடினால், அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை காண்பிக்க வீடியோவையும் வெளியிட்டார். என் அம்மா தயாரித்த கஜ்ரா, மற்ற பூக்கள் அனைத்தையும் விடவும் அழகான வாசனையை தருகிறது என சுரேகா தெரிவித்துள்ளார்.

முதலில் போட்டோவை பார்த்த பலரும், இது உண்மையான பூக்களாக தான் இருக்கும் என நினைத்தார்கள். ஒருவேளை தனது பதிவில் சுரேகா இது டிஸ்யூ பேப்பரில் இருந்து தயாரிக்கப்பட்டது என தெரிவிக்கவில்லை என்றால், அதனை உண்மையான பூக்கள் என்று தான் அனைவரும் யூகிப்பார்கள். சுரேகாவின் இந்த பதிவு வைரலாக பரவி நெட்டிசன்களின் இதயத்தை வென்றது. அந்த அன்பு அம்மாவுக்கு அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Views: - 6

0

0