வெள்ளத்தில் சிக்கிய நாய்க்குட்டியை காப்பாற்றிய தாய்: நெகிழ வைத்த வீடியோ!

19 October 2020, 11:27 am
Dog Kid Saves - Updatenews360
Quick Share

கனமழையால் கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாய் ஒன்று வெள்ள நீரில் இருந்து தனது குட்டியை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்தில் உள்ள உயிரினங்களில் தனித்தன்மை வாய்ந்தது தாய் தான். எந்த ஆபத்தில் இருந்தாலும் தனது குட்டியை உயிரை கொடுத்து காப்பாற்றுவது தாய்தான். இது அனைத்து உயிரினங்களுக்கும் உரியதாகும்.

இப்படித்தான் கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழையால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சாலை எங்கும் வெள்ளநீர் கரைபுரண்டி ஓடியது. இந்த நிலையில் விஜயபுரா மாவட்டம் தரப்பூர் கிராமத்தில் நாய் ஒன்று தனது குட்டியை வாயில் பிடித்துகொண்டு, முழங்கால் அளவு ஆழமான நீர் வழியே கடந்து கரையை செல்ல முயற்சித்தது.

குட்டியை காப்பாற்றும் நோக்கில் தனது உயிரை பற்றி கவலைப்படாமல் அந்த தாய் நாய் செய்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. இங்த சம்பவம் பார்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 19

0

0