இது லிஸ்டுலயே இல்லப்பா…. மருமகளை கொலை செய்து தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த மாமியார் : குடும்பச் சண்டையால் விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2022, 12:34 pm
Mother in Law Arrest - Updatenews360
Quick Share

குடும்ப பிரச்சினை காரணமாக மருமகள் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து சரணடைந்த மாமியாரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கொத்தப்பேட்டை ராமாபுரத்தை சேர்ந்த சுப்பம்மா என்பவர் தன்னுடைய மருமகள் வசுந்தரா தலையை வெட்டி எடுத்து வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். சுப்பம்மாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக வசுந்தராவின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்கு வந்து சுப்பம்மாவை தாக்கியதாக தெரியவந்துள்ளது.

இதனால் ஆவேசம் அடைந்த சுப்பம்மா இன்று மாலை யாரும் இல்லாத நேரத்தில் வசுந்தராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வசுந்தரா தலையை வெட்டி தனியாக எடுத்த சுப்பம்மா தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 232

0

0