காதலால் பிறந்த குழந்தையை பறிகொடுத்த தாய் : 11 மாத கால போராட்டத்திற்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 November 2021, 8:16 pm
Infant Rescue -Updatenews360
Quick Share

கேரளா : கேரள தம்பதியின் பிறந்த ஆண் 3 நாட்களில் பறிக்கப்பட்ட நிலையில் 11 மாதங்களுக்கு பின் கண்டுபிடித்துள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பேரூர் கடைப்பகுதியில் ஆளும் கட்சியான சிபிஎம் கட்சியின் ஏரியா கமிட்டி உறுப்பினராக உள்ள ஜெயச்சந்திரன் என்பவரின் மகள் அனுபமா. அவர் அப்பகுதியில் சக கட்சி உறுப்பினராக உள்ள அஜித் என்பவரை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்தார்.

அஜித் பட்டியலினத்தவரை சேர்ந்தவர் என்பதால் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அஜித்துடன் அனுபமாக கரம் கோர்த்தார். அஜித் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்துக்கு விண்ணப்பம் செய்தவர்.

இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து அனுபமா கர்ப்பமும் அடைந்தார். இதையடுத்து மகளை சேர்ப்பதாக கூறிய ஜெயச்சந்திரன் தாய்மை காலம் என்பதால் கூடவே தங்க வைத்துக்கொண்டார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனுபமாவுக்க ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 3 நாட்களில் அனுபமாவிடம் இருந்து குழந்தையை பிரித்த ஜெயச்சந்திரன் வேறொரு குடும்பத்திற்கு தத்து கொடுத்துள்ளார்.

முதலில் இதுபற்றி தெரியாத அனுபமாக ஆறு மாதங்களுக்கு பிறகே இந்த விஷயத்தை கேள்விப்பட்டு தனது குழந்தையை தேடி ஆறு மாதமாக அலைவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியருந்தார். மேலும் கேரள சட்டசபைக்கு வெளியே போராட்டம் நடத்தினார்.

குழந்தையை மீட்க ஆறு மாதக்ஙளாக அரசு அமைப்புகளில் முறையிட்டு போராடி ஊடகத்துக்கு தெரியப்படுத்தினார். இதையடுத்து காவல்துறை, நீதிமன்றம் வாயிலாக கேரள அரசு குழந்தையை தேடும் முயற்சியில் இறங்கியது.

கடந்த ஞாயிறன்று, கேளராவில் இருந்து ஆந்திர தம்பதிக்கு குழந்தை தத்துக்கொடுக்கப்பட்டதாக தெரியவந்ததையடுத்து குழந்தையை திருவனந்தபுரத்துக்கு அழைத்து வரப்பட்டது.

பின்னர் காந்தை மற்றும் அனுபமா, அஜித் ஆகியோரம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டடு முடிவில், அவர்களது குழந்தைதான் என்பது உறுதியானது. இதையடுத்து குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக குழந்தைகள் நலக் குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்படி, குழந்தை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் அனுபமா மற்றும் அஜித்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்மூலம் அனுபமா – அஜித்தின் 11 மாத கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் குழந்தையை ஆந்திர தம்பதிகள் அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்ள அனுபமா அனுமதியளித்துள்ளார். மேலும் குழந்தையை வளர்த்த ஆந்திர தம்பதிக்கு அனுபமா நன்றி தெரிவித்துள்ளார்.

Views: - 184

0

0