கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை..! 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு..!

24 January 2021, 4:01 pm
liquor_updatenews360
Quick Share

மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் நடந்த ஒரு சோக நிகழ்வை அடுத்து, போபாலில் கள்ளச் சாராயம் எனும் சட்டவிரோத மதுபான வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதுடன், கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி 12’ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 20’க்கும் மேற்பட்டோர் பலியான நிகழ்வு, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை அடுத்து மத்திய பிரதேச நிர்வாகம், மாநிலம் முழுவதும் சட்டவிரோத மதுபானங்களை எதிராக கடும் நடவடிக்கையைத் தொடங்கியது. இந்நிலையில் போபாலில் சட்டவிரோத மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்த ஒரு கும்பலை போபால் போலீசார் கண்டறிந்து, 6 பேரைக் கைது செய்தனர்.

இந்த நபர்களிடமிருந்து சட்டவிரோத மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்த பின்னர், மாவட்ட ஆட்சியர் அவினாஷ் லவானியா, 1915 கலால் சட்டத்தின் 34 (1) மற்றும் (2) பிரிவுகளின் கீழ், 6 பேர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்க போபால் மாவட்ட ஆட்சியரும் கடுமையான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.

கலால் மற்றும் காவல் துறைகள் கடுமையாக செயல்படுவதாகவும், இதுவரை கலால் சட்டத்தின் கீழ் 127 வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும், 1,308 லிட்டர் மதுபானம், மதுபானம் தயாரிக்க தேவைப்படும் 52,000 கிலோ மஹுவா பழம் மற்றும் இரண்டு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Views: - 0

0

0