ம.பி. இடைத்தேர்தல் நிலவரம்..! 13 இடங்களில் முன்னிலை..! தனிப்பெரும்பானமையை உறுதி செய்யும் முனைப்பில் பாஜக..!

10 November 2020, 12:01 pm
shivraj_chouhan_updatenews360
Quick Share

மத்தியப்பிரதேசத்தில் 28 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், பாரதிய ஜனதா 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி ஐந்து இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

மத்தியபிரதேச முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியை விட்டு வெளியேறி, பாஜகவில் இணைந்த பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒரு குழுவாக கிளர்ச்சி கமல்நாத் அரசாங்கம் கவிழும் சூழலை ஏற்படுத்தினர்.

மேலும்  கிளர்ச்சியில் ஈடுபட்ட 22 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால், அந்த 22 இடங்கள் உட்பட மொத்தம் 28 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இந்த 28 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தலில், பாஜக குறைந்தபட்சம் 8 எம்எல்ஏக்களை பெற்றால் மட்டுமே மாநில சட்டசபையில் பெரும்பான்மை கிடைக்கும் என்பதால், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தலாக இது மாறியுள்ளது.

ஜூரா, சுமோலி, மோரேனா, திமானி, அம்பா, மெஹ்கான், கோஹாட், குவாலியர், குவாலியர் கிழக்கு, தப்ரா, பாண்டர், கரேரா, போஹாரி, பமோரி, அசோக் நகர், முங்காவோலி, சுர்கி, மல்ஹாரா, அனுப்பூர், சாஞ்சி, அகர், ஹத்பிப்லியா, மந்தாட்டா, நேபாநகர், பத்னாவர், சன்வர் மற்றும் சுவஸ்ரா ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது..

இதில் தற்போதைய நிலவரப்படி, பாஜக 13 இடங்களில் முன்னிலை வகிப்பதால், சிவராஜ் சிங் சவுகான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 18

0

0