தேர்தல் அறிக்கையில் புறக்கணிப்பு..! காங்கிரசால் கை கழுவப்படுகிறாரா ராகுல் காந்தி..?

By: Sekar
15 October 2020, 1:32 pm
MP_Congress_UpdateNews360
Quick Share

மத்திய பிரதேச சட்டசபை இடைத்தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருந்து ராகுல் காந்தி மற்றும் திக்விஜய் சிங் புகைப்படங்கள் இடம் பெறாதது தொடர்பாக மத்திய பிரதேச காங்கிரசில் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

தேர்தல் அறிக்கையில், ராகுல் மற்றும் திக்விஜய் சிங் புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டு, கமல்நாத், சோனியா காந்தி மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமே காணப்பட்டன.

இந்த விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மனக் அகர்வால், ராகுல் காந்தியின் தலைமையில் மத்திய பிரதேசத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என்று கூறினார்.

அவர் மேலும், “திக்விஜய சிங்கின் பின்னே ஒரு மிகப்பெரும் ஆதரவாளர் கூட்டம் இருக்கும் நிலையில், அந்த அறிக்கையில் அவரின் புகைப்படம் காணாமல் போனது ஆச்சரியமாக இருக்கிறது. எனவே ராகுல் மற்றும் கட்சியின் மாநிலங்களவை எம்பி திக் விஜய் சிங்கின் புகைப்படங்கள் நிச்சயமாக இருக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்

கட்சியின் 2018 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ராகுல் காந்தியின் புகைப்படம் முதல் பக்கத்தில் இருந்தது. ஆனால் இந்த முறை முன்னாள் முதல்வர் கமல்நாத், சோனியா காந்தி மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் புகைப்படங்களை மட்டுமே கொண்டுள்ளனர்.

ராகுல் காந்தி என்னதான் மோடி மற்றும் பாஜகவுக்கு எதிராக பலகட்ட போராட்டங்களை நடத்தினாலும், அவர் மக்கள் மத்தியில் ஜோக்கராகவே கருதப்படுகிறார். மேலும் அவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பிலும் இல்லை என்பதால், அவரைக் கைகழுவ மத்திய பிரதேச காங்கிரசார் முடிவு செய்துள்ளதாகவும், இதனால் தான் அவரின் புகைப்படம் பயன்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் கமல்நாத் கட்டுப்பாட்டில் உள்ள மத்தியபிரதேச காங்கிரஸ், அங்கு முன்பு மீண்டும் முதல்வராக இருந்த திக் விஜய் சிங்கின் கரம் மேலும் வலுப்பட்டுவிடக் கூடாது எனும் உள்ளடி அரசியலால் தான் அவரது புகைப்படமும் பயன்படுத்தப்படவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Views: - 162

0

0