நாதுராம் கோட்சே பக்தருக்கு காங்கிரசில் இடமா..? கொந்தளித்த காங்கிரஸ் தலைவர்..!

26 February 2021, 9:42 pm
kamalnath_Updatenews360
Quick Share

மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு தனியாக கோவில் கட்டிய முன்னாள் நகராட்சி கவுன்சிலர் முன்னாள் மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத் முன்னிலையில் காங்கிரசில் இணைந்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் அருண் யாதவ் இதற்கு எதிராக கட்சித் தலைமைக்கு ஒரு திறந்த கடிதம் எழுதினார்.

“காங்கிரசின் காந்திய சித்தாந்தத்தின் உண்மையான சிப்பாய் என்பதால் என்னால் அமைதியாக உட்கார முடியாது. எனது போராட்டம் எந்தவொரு நபருக்கும் எதிரானது அல்ல. ஆனால் அது காங்கிரசின் சித்தாந்தத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதற்காக எந்தவொரு அரசியல் சேதத்தையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.” என்று அருண் யாதவ் குறிப்பிட்டுள்ளார். 

“பல பெரிய அரசியல்வாதிகள் இந்தியாவின் முதல் பயங்கரவாதி நாதுராம் கோட்சே என்று கூறுகிறார்கள். ஆனால் கோட்சே பக்தர் காங்கிரசுக்குள் இணைவது குறித்து அவர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

கோட்சேவை ஒரு தேசபக்தர் என்று அழைத்த பாராளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாகூரை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளுமா என்று அருண் யாதவ் கேள்வி எழுப்பினார். 

முன்னாள் முதல்வர் கமல்நாத் முன்னிலையில் பாபுலால் சவுராசியா எனும் கோட்சே பக்தர் சமீபத்தில் காங்கிரசில் சேர்க்கப்பட்டார்.

“கமல் நாத் தனது பதவிக் காலத்தில், மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு ஆதரவாக ஆபாசமான வார்த்தைகளுடன் துண்டு பிரசுரங்களை விநியோகித்ததற்காக பாபுலால் சவுராசியா மற்றும் பிறருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தார்.” என அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையே காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் சிங் யாதவ், அருண் யாதவின் தனிப்பட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

“பாபுலால் சவுராசியா 2015’க்கு முன்னர் காங்கிரசில் இருந்தவர் என்ற முறையில் தற்போது தனது கட்சிக்குத் திரும்பினார். அவர் இந்து மகாசபாவால் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், காந்திய சித்தாந்தத்தை நம்புவதாகவும், கோட்சே மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவாகக் கூறினார்.” என அஜய் சிங் யாதவ் கூறினார்.

தற்போது காங்கிரஸ் தலைவர் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறார் என்று மாநில அமைச்சர் விஸ்வாஸ் சரங் கூறினார்.

“கட்சித் தலைவர்கள் பதவிகளுக்காக ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள். கட்சியின் தலைவர்கள் கட்சியின் சித்தாந்தத்தைப் பற்றியும் குழப்பமடைந்துள்ளனர் என்பதை அருண் யாதவ் தெளிவுபடுத்தினார்.” என மேலும் விமர்சித்துள்ளார்.

Views: - 25

0

0