மொழி அரசியல் செய்கிறாரா கனிமொழி..! விஸ்வரூபம் எடுக்கும் விமான நிலைய விவகாரம்..!

12 August 2020, 3:52 pm
Quick Share

விமான நிலைய விவகாரம் குறித்து கனிமொழியிடம் விசாரணை நடத்த CISF அலுவலகம் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு எம்.பி கனிமொழி டெல்லிக்கு வருவதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அவரிடம் அங்கிருந்த CISF பெண் காவலர் ஒருவர் இந்தியில் பேசியதாகவும், அதற்கு எனக்கு இந்தி தெரியாது ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுகள் எனவும் கூறியதாக தெரிகிறது. அதற்கு அந்த பெண் காவலர் நீங்கள் இந்தியரா என தம்மை அவமதித்ததாக கனிமொழி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில், CISF உயர் அதிகாரிகள் கனிமொழியை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்தி பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்கவும் CISF தானாக முன் வந்தது.

அதற்காக கனிமொழியிடம் சம்பவம் தொடர்பான விவரங்கனை தருமாறு CISF கோரியுள்ளது. ஆனால் இதுவரை கனிமொழி எந்த விவரங்களையும் சமர்பிக்கவில்லை என கூறப்படுகிறது.


இதனால், எதிர்கட்சி தலைவர்கள் கனிமொழி, “மொழி அரசியல்” செய்ய முயற்சிப்பதாகவும், எந்த பெண்காவலரும் அவரிடம் அப்படி பேசியிருக்க வாய்ப்பு இல்லை எனவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த சூழலில், தங்கள் துறைக்கு நேர்ந்த களங்கத்தை துடைத்தே அவோம் எனவும், உண்மை என்ன என்பது விரைவில் வெளிக்கொண்டு வருவோம் எனவும் CISF தலைமை அதிகாரிகள் உறுதி பூண்டுள்ளனர்.

மேலும், கனிமொழி வந்து சென்ற விமான நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிகிறது. இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து கனிமொழியிடம் விசாரணை நடத்த CISF அலுவலகம் மூலம் நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது.

Views: - 82

0

0