சாலையோரம் சமூக சேவைக்கு சற்று நேரம்..

19 November 2019, 7:52 am
SB-UPDATENEWS360
Quick Share

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரை சேர்ந்த, சுபி ஜெயின் என்னும், எம்.பி.ஏ. படிக்கின்ற கல்லூரி மாணவியான இவர், சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு, தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவது பற்றிய பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அவசியம் பற்றி வலியுறுத்தி சமூக சேவை செய்து வருகின்றார்.

இந்தூரில் புராதனமான முக்கிய சாலைகளில், போக்குவரத்து நெரிசலை நூதன முறையில், நடனமாடி சீர் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றார்.

போக்குவரத்து விதிகளை மீறுகின்ற இண்டூர் நகரின் வாகன ஒட்டிகளிடம், அன்புடன் அறிவுரை மற்றும் புத்திமதிகள் கூறி வாகனத்தை ஒழுங்குப்படுத்தி, பைக்கில் மூன்று பேருக்கு மேல் பயணம் மேற்கொள்பவர்களிடம், இது போன்ற ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று, அவர்களிடம் பிரார்த்தனை செய்து கும்பிட்டு கேட்டுக் கொண்டு, சீட் பெல் அணியாமல் கார் ஓட்டுபவர்களுக்கும், சீட் பெல்ட் அணிந்து விடுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.