பாஜகவில் அதிரடி மாற்றங்கள்: தேசிய செயற்குழு பொறுப்பில் இருந்து எம்.பி.க்கள் மேனகா காந்தி, வருண் காந்தி திடீர் நீக்கம்!!

Author: Aarthi Sivakumar
7 October 2021, 4:02 pm
Quick Share

பாஜக தேசிய செயற்குழுவில் இருந்து எம்.பி.க்கள் மேனகா காந்தி, வருண் காந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசம்: லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணை வேண்டும் என வருண் காந்தி ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில், அவரும் மேனகா காந்தியும் பாஜக தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3ம் தேதி மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் காரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது கருப்புக்கொடி காட்ட முயற்சித்த விவசாயிகள் மீது கார் ஏற்றியதாக வீடியோ ஒன்று வெளியானது.

இந்த கோரவிபத்தில், 4 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்ததாக விவசாய சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிகழ்வு நாடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை பல போராட்டங்களுக்கு பிறகு பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி நேற்று சந்தித்தனர்.

இந்நிலையில், இன்று இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு, விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு நியாயம் வேண்டும் என தந்து ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார் வருண் காந்தி. இந்நிலையில், மேனகா காந்தி, வருண் காந்தி ஆகியோர் பாஜக தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Views: - 556

0

0